டுவிட்டர் அலுவலகத்தில் டெல்லி போலீசார் நடத்திய சோதனையை, பேச்சுரிமை மீதான படுகொலை என காங்கிரஸ் கட்சி கண்டித்துள்ளது.
டுவிட்டரில் பதிவான கோவிட் டூல்கிட் தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும் என நேற்று டெல்லி போலீசின் ஸ்பெஷல் செல், டுவிட்டருக்கு நோட்டீஸ் அனுப்பியது.
அந்த டூல்கிட் தொடர்பாக, பாஜக செய்தித் தொடர்பாளர் சம்பித் பத்ரா பதிவிட்ட டுவிட்டை ஒரு சித்திகரிக்கப்பட்ட செய்தி என டுவிட்டர் நிறுவனம் கூறியதன் ஆதாரங்களை தருமாறும் நோட்டீசில் குறிப்பிடப்பட்டது. இந்த நிலையில், இரண்டு போலீஸ் டீம்கள் டெல்லி லாடோ சராய் மற்றும் குருகிராமில் உள்ள டுவிட்டர் அலுவலகத்தில் சோதனை நடத்தியதாக கூறப்படுகிறது. இதற்கு காங்கிரஸ் கண்டனம் தெரிவித்துள்ளது.