இந்த ஆண்டின் முதல் முழு சந்திர கிரகணம் நாளை நிகழும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக அம்மையம் விடுத்துள்ள அறிக்கையில் , இந்த முழு சந்திர கிரகணம் தென் அமெரிக்கா, வட அமெரிக்கா, ஆசியா, ஆஸ்திரேலியா, அன்டார்டிகா, பசிபிக் பெருங்கடல் மற்றும் இந்திய பெருங்கடல் பகுதிகளில் தெரியும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தியாவில், நிலா உதித்ததும், மிகக் குறுகிய நேரமே சந்திர கிரகணத்தை காண முடியும் என்றும் வடகிழக்கு மாநிலங்கள், மேற்கு வங்கத்தின் சில பகுதிகள், ஒடிசாவின் கடற்கரைப் பகுதிகளில் இதனை காண முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாலை 3.15 மணிக்குத் தொடங்கி மாலை 6.23 மணிக்கு கிரகணம் நிறைவு பெறும் என்றும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.