18 மாநிலங்களில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் கருப்புப் பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் ஹர்ஷவர்தன் தெரிவித்துள்ளார்.
சுகாதாரத்துறை அமைச்சர்கள் மாநாட்டில் பேசிய அவர், நாட்டிலேயே அதிகபட்சமாக குஜராத்தில் 2 ஆயிரத்து 165 பேரும், மகாராஷ்டிராவில் ஆயிரத்து 118 பேரும் கருப்புப் பூஞ்சையால் பாதிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார். கருப்பு பூஞ்சை சிகிச்சைக்காக ஆம்போடெரிசின்-பி இன் ஒன்பது லட்சம் குப்பிகளை மத்திய அரசு இறக்குமதி செய்து வருவதாகவும் அவர் கூறினார்.
இதில், 50 ஆயிரம் குப்பிகள் வந்துள்ளதாகவும், அடுத்த ஏழு நாட்களில் சுமார் மூன்று லட்சம் குப்பிகள் கிடைக்கும் என்றும் ஹர்ஷவர்தன் தெரிவித்தார். கொரோனா நோயாளிகளுக்கு முடிந்தவரை ஸ்டீராய்டு பயன்படுத்துவதைத் தவிர்க்குமாறும் மத்திய அமைச்சர் கேட்டுக் கொண்டார்.