ரஷ்ய தடுப்பூசியான ஸ்புட்னிக்-வி யின் உற்பத்தி இன்று இந்தியாவில் துவங்கியது. ரஷ்யாவின் நேரடி முதலீட்டு நிதியத்துடன் சேர்ந்து டெல்லியில் உள்ள பான்ஏசியா பயோடெக் (Panacea Biotec) நிறுவனம் இந்த தடுப்பூசி உற்பத்தியை துவக்கி உள்ளது.
ஆண்டொன்றுக்கு 10 கோடி ஸ்புட்னிக்-வி தடுப்பூசி இந்த நிறுவனத்தில் உற்பத்தியாகும் என ரஷ்ய நேரடி முதலீட்டு நிறுவனம் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது.
இமாச்சல் மற்றும் அரியானா எல்லையில் உள்ள பட்டி (Baddi) நகரத்தில் இருக்கும் ஆலையில் தயாராகும் முதலாவது பேட்ச் தடுப்பூசி, மாஸ்கோவில் உள்ள காமாலயா (Gamaleya) ஆய்வகத்திற்கு அனுப்பி அதன் தரம் பரிசோதிக்கப்படும்.