தமிழகத்திலிருந்து இருந்து யாரும் அத்தியாவசியமின்றி புதுச்சேரிக்குள் வர வேண்டாம் என எல்லை பகுதி சோதனை சாவடியில் தலைமை காவலர் கையெடுத்து கும்பிட்டு கேட்டுக் கொண்டார்.
புதுச்சேரி போலிசார் கோரிமேடு பகுதியில் சோதனைச் சாவடி அமைத்து தமிழக பகுதிகளில் இருந்து வரும் வாகனங்களை கண்காணித்து வருகின்றனர். அவர்களில் தன்வந்திரி நகர தலைமை காவலர் முருகன் என்பவர், தமிழகத்தில் இருந்து வரும் வாகனங்களைத் தடுத்து நிறுத்தி, அத்தியாவசியத் தேவையின்றி தயவு செய்து புதுச்சேரிக்குள் வராதீர்கள் என்று கையெடுத்து கும்பிட்டு கேட்டுக் கொண்டார்.