இந்தியா- சீனா எல்லையில் கல்வான் பள்ளத்தாக்கில் மீண்டும் சீனப்படைகளுடன் இந்திய ராணுவத்திற்கு லேசான மோதல் ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆனால் எந்தவித மோதலும் ஏற்படவில்லை என்று இந்திய ராணுவத்தின் தரப்பில் விளக்கம் தரப்பட்டுள்ளது.கடந்த ஆண்டு ஜூன் மாதம் இரு நாட்டு ராணுவ வீரர்கள் எல்லையை கடந்து வந்த பிரச்சினையில் நேருக்குநேர் மோதிக்கொண்டனர். போர் ஆயுதங்கள் இல்லாமல் கற்கள், இரும்பு கம்பிகள் கொண்டு பயங்கரமான தாக்கினர்.இதில் இந்திய வீரர்கள் 20 பேர் மரணம் அடைந்தனர்.
இந்தியாவின் பதிலடியால் சீனா தரப்பிலும் கடும் உயிர்ச்சேதம் ஏற்பட்டது. இருநாட்டு ராணுவ உயர் அதிகாரிகள் மட்டத்திலான 11 சுற்றுப் பேச்சுவார்த்தையில் சமாதானம் ஏற்பட்டது.எல்லையில் இருந்து இரு நாட்டு ராணுவ வீரர்களும் பின்வாங்கினர். இந்த நிலையில் இந்த மாதத் தொடக்கத்தில் இருநாட்டு ராணுவ வீரர்கள் லேசான கைகலப்பில் ஈடுபட்டதாக செய்திகள் கசிந்தன.