அலோபதி மருத்துவம் என்றழைக்கப்படும் ஆங்கில மருத்துவ முறைக்கு எதிரான சர்ச்சைக்குரிய கருத்துகளை கூறியதற்கு மன்னிப்பு கோரிய பாபா ராம்தேவ் தமது கருத்துகளைத் திரும்பப் பெறுவதாக தெரிவித்துள்ளார்.
சர்ச்சைக்குரிய கருத்துகளைத் திரும்பப்பெறும்படி பாபா ராம்தேவுக்கு மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷ்வர்தன் கடிதம் எழுதியதைத் தொடர்ந்து அவருக்கு பதில் எழுதிய ராம்தேவ் தமது கருத்துகளுக்காக வருந்துவதாக தெரிவித்துள்ளார். கோடிக்கணக்கான மக்களின் உயிர்களைக் காத்து வரும் மருத்துவத்தைப் பற்றிய பாபா ராம்தேவின் கருத்துகள் துரதிர்ஷ்டமானவை என்றும் ஹர்ஷ்வர்தன் தமது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
அலோபதி ஒரு மடத்தனமான அறிவியல் என்று பாபா ராம்தேவ் விமர்சித்த நிலையில் அதற்கு மருத்துவர்களிடமிருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியது. ராம்தேவ் மீது நடவடிக்கை எடுக்கும்படி மத்திய அரசுக்கு இந்திய மருத்துவர்கள் கவுன்சில் பரிந்துரை செய்தது.