கேரள சட்டசபையின் முதல் கூட்டத் தொடர் இன்று தொடங்குகிறது.
கடந்த சட்டமன்றத் தேர்தலில் இடதுசாரிக் கூட்டணி அமோக வெற்றி பெற்று ஆட்சியைத் தக்க வைத்தது. இதனைத் தொடர்ந்து புதிய உறுப்பினர்களுக்கு தற்காலிக சபாநாயகர் ரஹீம் பதவிப் பிரமாணம் செய்து வைக்கிறார். ஆளுநர் ஆரிப் முகமது கான் கலந்து கொள்ளும் இந்தக் கூட்டத் தொடர் கொரோனா நெறிமுறைகள்படி நடக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
நாளை சபாநாயகர் தேர்தல் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. பாலக்காடு மாவட்டம் திரிதாலா தொகுதியில் இருந்து தேர்வு செய்யப்பட்ட எம்.பி. ராஜேஷ் சபாநாயகராக போட்டியின்றி தேர்வு செய்யப்படுகிறார்.