பஞ்சாப் மாநில அரசுக்கு நேரடியாக கொரோனா தடுப்பு மருந்துகளை விற்க அமெரிக்காவின் மாடர்னா நிறுவனம் மறுத்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
பஞ்சாபில் மக்களுக்குத் தடுப்பூசி போடுவதற்காகத் தடுப்பு மருந்துகளைக் கொள்முதல் செய்ய பைசர், ஜான்சன் அண்டு ஜான்சன், காமாலேயா, மாடர்னா ஆகிய நிறுவனங்களை மாநில அரசு தொடர்பு கொண்டுள்ளது.
மற்ற நிறுவனங்கள் இதுவரை பதிலளிக்காத நிலையில், நேரடியாக மருந்து வழங்க மறுத்துள்ள மாடர்னா நிறுவனம், அலுவலக நடைமுறைப்படி எதுவானாலும் இந்திய அரசுடன் தான் பேச முடியும் என்றும், மாநில அரசுகளுடனோ, தனியாருடனோ எந்த உடன்படிக்கையும் கிடையாது எனக் கூறிவிட்டது.
இந்தத் தகவலைப் பஞ்சாபில் தடுப்பூசி இயக்கத்துக்குப் பொறுப்பான அதிகாரி தெரிவித்துள்ளார்.