வங்கக் கடலில் உருவாகும் யாஸ் புயல் புதன் மாலையில் ஒடிசா, வங்கதேசம் இடையே மேற்கு வங்கத்தில் அதிதீவிர புயலாக கரையைக் கடக்கும் என வானிலை ஆய்வுத் துறை கணித்துள்ளது.
இன்று காலை நிலவரப்படி கிழக்கு மத்திய வங்கக் கடலில் நிலவும் காற்றழுத்தத் தாழ்வு நிலை நாளைக்குள் புயலாக உருவெடுக்கும் எனக் குறிப்பிட்டுள்ளது. அதையடுத்த 24 மணி நேரத்தில் மேலும் வலுப்பெற்று அதிதீவிரப் புயலாக மாறும் என்றும் குறிப்பிட்டுள்ளது.
இது வடக்கு வடமேற்குத் திசையில் நகர்ந்து புதன் காலையில் வடக்கு வங்கக் கடற்பகுதியை அடையும் என்றும், அன்று மாலையில் வடக்கு ஒடிசா, வங்கதேசம் இடையே மேற்குவங்கத்தில் கரையைக் கடக்கும் என்றும் தெரிவித்துள்ளது.