இந்தியாவும் ரஷ்யாவும் கூட்டாக சுமார் 85 கோடி தடுப்பூசிகளை அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திற்குள் உற்பத்தி செய்யத் திட்டமிட்டுள்ளதாக புதின் அரசு அறிவித்துள்ளது. இதில் 60 சதவீதத்திற்கு மேல் இந்தியாவிலேயே உற்பத்தி செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒரு கோடியே என்பது லட்சம் டோஸ் ஸ்புட்னிக் வி தடுப்பு மருந்து ஆகஸ்ட் மாதத்தில் இந்திய மக்களின் பயன்பாட்டுக்கு கிடைக்கும் என்றும் இம்மாத இறுதிக்குள் 30 லட்சம் டோஸ்கள் அனுப்பி வைக்கப்படும் என்றும் புதின் அரசு உறுதியளித்துள்ளது.
இது தொடர்பாக செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் செய்தியாளர்களிடம் பேசிய ரஷ்யாவுக்கான இந்தியத் தூதர் வெங்கடேஷ் வர்மா, சிங்கிள் டோஸ் தடுப்பூசியான ஸ்புட்னிக் லைட்டிற்கு இந்திய அரசு முறைப்படி அனுமதி வழங்கும் போது அதன் உற்பத்திக்கான கூட்டு முயற்சிகள் தொடங்கும் என்றும் தெரிவித்துள்ளார்.