கொரோனா தீவிரமாக பரவும் இந்த சூழலில் அலோபதி மருத்துவமுறைக்கு எதிராக பேசியுள்ள பதஞ்சலி சாமியார் பாபா ராம்தேவ் மீது, பெருந்தொற்று நோய் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்குமாறு ஐஎம்ஏ எனப்படும் இந்திய மருத்துவர்கள் சங்கம் மத்திய அரசை வலியுறுத்தி உள்ளது.
ஆங்கில மருத்துவ முறையான அலோபதியை தவறாக விமர்சித்து ராம் தேவ் வெளியிட்ட வீடியோ, சமூக வலைதளங்களில் வேகமாக பரவுகிறது.
இதை அடுத்து ஒன்று, ராம்தேவின் குற்றச்சாட்டை ஏற்று அலோபதி மருத்துவமுறையையும் அதன் வசதிகளையும் கலைத்து விட வேண்டும், அல்லது அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் அறிக்கை ஒன்றில் ஐஎம்ஏ கேட்டுக் கொண்டுள்ளது.
இதற்கு முன்னரும் தனது மருந்துகளை விற்பதற்காக, மத்திய சுகாதார அமைச்சரை மேடையில் வைத்துக் கொண்டே, அலோபதி மருத்துவத்தை ராம் தேவ் எள்ளிநகையாடி உள்ளார் எனவும் ஐஎம்ஏ கண்டனம் தெரிவித்துள்ளது.