கர்நாடகாவில் முழு ஊரடங்கு மேலும் இரண்டு வாரங்களுக்கு- ஜூன்மாதம் 7ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக முதலமைச்சர் எடியூரப்பா அறிவித்துள்ளார்.
அமைச்சரவைக் கூட்டத்தில் நடைபெற்ற ஆலோசனையில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. கடந்த மே 10ம் தேதி அறிவிக்கப்பட்ட ஊரடங்கு 24ம் தேதியுடன் நிறைவு பெற இருந்த நிலையில் மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது. முந்தைய அனைத்துக் கட்டுப்பாடுகளும் தொடர்ந்து நீடிக்கும்.
பேருந்து போக்குவரத்து, பெங்களூர் மெட்ரோ உள்ளிட்டவை இயங்காது. அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்யும் மளிகை, காய்கறி கடைகள் காலை 6 மணி முதல் 10 மணி வரை மட்டுமே செயல்படும்.