கொரோனாவுக்கு எதிரான போரில் புதிய சவாலான கரும்பூஞ்சை நோயை எதிர்கொள்ளத் தயாராக வேண்டும் எனப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
உத்தரப்பிரதேசத்தின் வாரணாசியில் உள்ள மருத்துவர்கள், முன்களப் பணியாளர்களுடன் காணொலியில் கலந்துரையாடிய பிரதமர், குறுகிய காலத்தில் தீவிரச் சிகிச்சைப் பிரிவு, ஆக்சிஜன் வசதிப் படுக்கைகளின் எண்ணிக்கையை அதிகரித்ததற்குப் பாராட்டினார்.
கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளை அறிவித்து வீடுவீடாக மருந்துகளை வழங்கியதற்கும் பாராட்டினார். தடுப்பூசியால் முன்களப் பணியாளர்களுக்குப் பாதுகாப்பு கிடைப்பதாகக் குறிப்பிட்ட அவர், வரும் நாட்களில் அனைவருக்கும் தடுப்பூசி போடப்படும் எனத் தெரிவித்தார்.