மும்பை அருகே கடலில் மூழ்கிய கப்பலில் இருந்து 600க்கும் மேற்பட்ட ஓஎன்ஜிசி ஊழியர்களை கடற்படையினர் உயிருடன் மீட்ட நிலையில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 49 ஆக அதிகரித்துள்ளது.
மேலும் 37 பேர் காணவில்லை என்று அவர்களைத் தேடும் பணி இரவு பகலாக நடைபெறுகிறது. மும்பை-குஜராத் கடல் பகுதியை சூறையாடிய டக் தே புயலால் எண்ணெய் நிறுவனத்தின் டிரில் கப்பல்களில் பழுது ஏற்பட்டதால் அதில் இருந்த நூற்றுக்கணக்கான ஊழியர்கள் பல மணி நேரம் கடலுக்குள் தத்தளிக்கும் நிலை ஏற்பட்டது.
இதனிடையே இன்னொரு கப்பல் கடலில் மூழ்கியது. கடற்படையின் இரண்டு போர்க்கப்பல்களாக கொல்கத்தாவும் கொச்சியும் ஹெலிகாப்டர் உதவியுடன் கடலில் சிக்கியவர்களை மீட்டன. மீட்கப்பட்டவர்கள் மும்பைக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில் எஞ்சியுள்ளோரைத் தேடும் பணியில் மேலும் மூன்று கப்பல்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.