கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த காற்றோட்டமான அறைகளுக்கு முக்கியப் பங்கு இருப்பதாக முதன்மை அறிவியல் ஆலோசகர் அலுவலகம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக சில வழிகாட்டுதல்கள் நேற்று வெளியிடப்பட்டுள்ளன.
காற்றோட்டமான அறைகள் கொரோனா தொற்று ஒருவரிடமிருந்து இன்னொருவருக்குப் பரவுதற்கான ஆபத்தைக் குறைக்கும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வீடுகளிலும் அலுவலகங்களிலும், ஜன்னல்களைத் திறந்து வைத்து காற்றோட்டமான சூழலை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கும்படியும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் பேசும்போதும், சிரிக்கும் போதும் இருமுகிற போதும் தும்மல் விடும் போதும் தெறிக்கும் நீர்த்துளிகள் பத்து மீட்டர் தூரம் வரை காற்றில் பரவும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பொது இடங்களில் இரட்டை மாஸ்க் அணிவது மேலும் பாதுகாப்பை உறுதி செய்யும் என்றும் அதில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.