இந்தியாவில் மே மாதத்தில் முதல் 19 நாட்களில் மட்டும் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 75 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது.
கொரோனா முதல் அலையின்போது 2020 செப்டம்பரில் 33 ஆயிரம் பேர் இறந்ததே அதிக இழப்பாக இருந்தது. கொரோனா இரண்டாவது அலையின் போது இந்த ஆண்டின் முதல் 3 மாதங்களில் உயிரிழப்பு எண்ணிக்கை தலா ஆறாயிரத்துக்கும் குறைவாகவே இருந்தது.
ஏப்ரல் மாதத்தில் 49 ஆயிரம் பேர் உயிரிழந்தனர். மே மாதத்தின் முதல் 19 நாட்களில் மட்டும் உயிரிழந்தோர் எண்ணிக்கை 75 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது.
தெலங்கானா, கர்நாடகம், கேரள மாநிலங்களில் புதிதாகத் தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை குறைந்துள்ள அதே நேரத்தில் தமிழகம், ஆந்திரத்தில் அதிகரித்துள்ளது. ஒடிசா, மேற்கு வங்கம், அசாம், திரிபுரா ஆகிய கிழக்கு மாநிலங்களில் மே மாதத் தொடக்கத்தில் இருந்ததைவிட நேற்றுக் கொரோனா பரவல் அதிகரித்துள்ளது.