காற்றோட்டமுள்ள இடத்தில் காற்றில் உள்ள வைரஸ் அளவு குறையும் என்பதால், தொற்றுள்ள ஒருவரிடமிருந்து மற்றவருக்குப் பரவும் அபாயம் குறையும் என இந்திய அரசின் முதன்மை அறிவியல் ஆலோசகர் தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிவுரைகளில், முகக்கவசம், இடைவெளி, தூய்மை செய்தல், காற்றோட்டம் ஆகியன கொரோனா பரவலைத் தடுக்கும் எனக் குறிப்பிட்டுள்ளது.
வீடுகளிலும் அறைகளிலும் நல்ல காற்றோட்டம் இருந்தால் காற்றில் உள்ள வைரசின் அளவு குறையும் எனக் குறிப்பிட்டுள்ளது. தொற்றுள்ள ஒருவரிடம் இருந்து பிறருக்குத் தொற்று பரவும் அபாயத்தைக் காற்றோட்டம் குறைக்கும் எனக் குறிப்பிட்டுள்ளது.