பயனர்களின் தகவல் பாதுகாப்பு தொடர்பாக வாட்ஸ் அப் நிறுவனத்திற்கு மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சகம் சார்பில் புதிய நோட்டீஸ் அனுப்ப ப்பட்டுள்ளது.
இந்த நோட்டீசில், நியாயமற்ற விதிமுறைகளையும், நிபந்தனைகளையும் இந்திய பயனர்கள் மீது சுமத்துவது சிக்கல் மட்டுமல்ல, பொறுப்பற்றத்தனம் என்று குறிப்பிட்டுள்ளது.
வருகிற 25ந் தேதிக்குள் நோட்டீஸுக்கு பதிலளிக்கவில்லை எனில் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அந்த நோட்டீசில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் 40கோடிக்கும் மேற்பட்டவர்கள் வாட்ஸ்அப்பை பயன்படுத்துகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.