திருமணமாகாமல் சேர்ந்து வாழும் லிவிங் இன் உறவு முறை என்பது ஒழுக்க ரீதியாகவும், சமூக ரீதியாகவும் ஏற்கத்தக்கதல்ல என பஞ்சாப்-அரியானா உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
19 வயதான பெண்ணும், 22 வயதான இளைஞரும் சேர்ந்து வாழ்வதாகவும், விரைவில் திருமணம் செய்து கொள்ளவிருப்பதாகவும், ஆனால் பெண்ணின் தாயாரிடம் இருந்து தங்களுக்கு அச்சுறுத்தல் வருவதாகவும் நீதிமன்றத்தில் முறையிட்டனர்.
பெண்ணின் வயது குறித்த ஆவணங்கள் அவரது தாயாரிடம் சிக்கிவிட்டதால் திருமணம் செய்ய இயலவில்லை என்பதும் அவர்களின் வாதம்.
அப்போது இது போன்ற வாழ்க்கை முறை ஏற்புடையது அல்ல என்கிற கருத்தை வெளியிட்ட நீதிமன்றம், அவர்களின் மனுவை தள்ளுபடி செய்தது.