நாரதா டேப் லஞ்ச விவகாரத்தில் மேற்கு வங்க அமைச்சர்களான பிர்ஹாத் ஹக்கீம், சுப்ரதா முகர்ஜி, முன்னாள் அமைச்சர் சோவன் சட்டர்ஜி மற்றும் திரிணமூல் எம்எல்ஏ மதன் மித்ரா ஆகியோரை சிபிஐ கைது செய்துள்ளது.
அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி குற்றப்பத்திரிகையும் இன்றே தாக்கல் செய்யப்படும் என கூறப்படுகிறது.
மேற்கு வங்கத்தில் தொழில்துவங்குவதாக போலியாக கூறி திரிணமூல் அமைச்சர்களுக்கு பணம் கொடுத்து அது வீடியோவாக பதிவு செய்யப்பட்டு 2016 ல் வெளியான டேப்பின் அடிப்படையில் சிபிஐ வழக்கு பதிவு செய்ய கொல்கத்தா உயர்நீதிமன்றம் 2017 ல் இனுமதி வழங்கியது.
இதனிடையே அமைச்சர்கள் கைது செய்யப்பட்தை தொடர்ந்து முதலமைச்சர் மம்தா பானர்ஜி கொல்கத்தாவில் உள்ள சிபிஐ அலுவலகத்திற்கு நேரில் சென்றார்.