ரஷ்யாவில் இருந்து இரண்டாம் தொகுப்பு ஸ்புட்னிக் தடுப்பு மருந்து ஐதராபாத்துக்கு விமானத்தில் கொண்டுவரப்பட்டுள்ளது.
முதல் தொகுப்பாக ஒன்றரை லட்சம் டோஸ் ஸ்புட்னிக் தடுப்பு மருந்து மே முதல் நாளில் ஐதராபாத்துக்குக் கொண்டுவரப்பட்டது. இன்று இரண்டாம் தொகுப்பு மருந்து வந்தது குறித்துப் பேசிய ரஷ்யத் தூதர் நிக்கோலாய் குடசேவ், ஸ்புட்னிக் தான் உலகிலேயே அதிகச் செயல்திறன் கொண்டது எனத் தெரிவித்தார்.
புதிய வகை கொரோனா தொற்றுக்கு எதிராகவும் இது திறம்படச் செயலாற்றும் என ரஷ்ய அறிவியலாளர்கள் தெரிவித்துள்ளதைக் குறிப்பிட்டார்.
இந்தியாவில் ஸ்புட்னிக் தடுப்பு மருந்து உற்பத்தி தொடங்கப்பட்டுப் படிப்படியாக ஆண்டுக்கு 85 கோடி டோஸ் என்கிற அளவுக்கு அதிகரிக்கப்படும் என்றும் நிக்கோலாய் குடசேவ் தெரிவித்தார்.