அரபிக் கடலில் உருவாகியுள்ள தாவ்தே புயல் செவ்வாயன்று குஜராத்தில் கரையைக் கடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளதால், புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்துப் பிரதமர் மோடி ஆலோசனை நடத்துகிறார்.
இந்தப் புயல் செவ்வாய் பிற்பகலில் குஜராத்தின் போர்பந்தர் - நாலியா இடையே கரையைக் கடக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளது.
புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்பாக அனைத்துத் துறை உயர் அதிகாரிகள், தேசியப் பேரிடர் மேலாண்மை ஆணைய அதிகாரிகள் ஆகியோருடன் பிரதமர் மோடி இன்று ஆலோசனை நடத்த உள்ளார்.
நாட்டின் பல நகரங்களில் இருந்தும் தேசியப் பேரிடர் மீட்புப் படையினர் தேவையான கருவிகளுடன் குஜராத்துக்குப் புறப்பட்டுள்ளனர்.