கொரோனா பாதித்தும் தைரியத்தை இழக்காமல், மற்றவர்களுக்கும் தன்னம்பிக்கை அளித்த டெல்லியைச் சேர்ந்த 30 வயது பெண் உயிரிழந்தார்.
ஸ்ருதி என்ற அந்த பெண் 5 வயது குழந்தைக்கு தாய் ஆவார். சில நாட்களுக்கு முன் கொரோனா உறுதியாகி, தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்தார்.
அப்போதும், தன்னம்பிக்கை இழக்காத அவர், தனக்கு சிகிச்சை அளித்த மருத்துவரிடம், ஏதாவது பாடலை இசைக்க செய்யுமாறு கேட்டுள்ளார்.
மருத்துவரும் லவ் யூ சிந்தகி என்ற இந்தி பாடலை ஒலிக்கவிட, படுக்கையில் உட்கார்ந்தபடியே மூச்சு விடுவதற்கு சிரமமாக இருந்தபோதும் கை, கால்களை அசைத்து அந்த பெண் நடனம் ஆடிய காட்சிகள் இணையத்தில் வைரலாகின.
இந்த நிலையில், எவ்வளவோ போராடியும் ஒரு தைரியமான உயிரை காப்பாற்ற முடியவில்லை எனவும், ஸ்ருதியின் மறைவு தனது சொந்த குடும்பத்தில் ஒருவர் இழந்ததை போல இருப்பதாகவும் அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர் மோனிகா ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.