ஜி 7 நாடுகளின் உச்சிமாநாட்டில் பிரதமர் மோடி நேரடியாக பங்கேற்க மாட்டார் என்று வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தற்போதைய கொரோனா பரவல் சூழ்நிலையில் இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சனின் அழைப்பை பிரதமர் மோடி ஏற்க முடியாத நிலை இருப்பதாகவும் அவர் லண்டன் செல்ல மாட்டார் என்றும் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
வரும் ஜூன் 11 முதல் 13 ந் தேதி வரை நடைபெறும் ஜி 7 நாடுகளின் மாநாட்டில் பங்கேற்க கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, ஜப்பான், இத்தாலி, இங்கிலாந்து, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் தலைவர்களுக்கு போரிஸ் ஜான்சன் அழைப்பு விடுத்துள்ளார்.