சக காவலர்கள் உரிய நேரத்திற்கு வராததால்,செங்கல்பட்டு அனைத்து மகளிர் காவல்நிலையத்துக்கு பெண் ஆய்வாளர் பூட்டுப்போட்டுவிட்டு சென்றார்.
நீதிமன்றத்துக்கு செல்ல வேண்டியிருப்பதால், காவல்நிலையத்துக்கு அதிகாலையிலேயே வருமாறு காவலர்களுக்கு ஆய்வாளர் ராஜாமணி அருள்மொழிதேவி உத்தரவிட்டிருந்தார்.
ஆனால் காலை 6 மணியாகியும் காவலர்கள் யாரும் வராததால் ஆத்திரமடைந்த ராஜா மணி, தேவையான ஆவணங்களை எடுத்துக்கொண்டு காவல்நிலையத்தை பூட்டிவிட்டு நீதிமன்றத்துக்கு சென்றுவிட்டார்.
தாமதமாக காவல்நிலையம் வந்த காவலர்களும், புகாரளிக்க வந்த பெண்களும் காவல்நிலையத்துக்கு வெளியே நீண்ட நேரமாக காத்துக்கிடந்தனர்.
பின்னர் 12 மணிக்கு வந்த பெண் ஆய்வாளர், சக காவலர்களை திட்டியபடி சாவியை தூக்கி எரிந்ததையடுத்து காவல்நிலையம் திறக்கப்பட்டது.