அவசரகால மருத்துவ உபகரணங்களின் கொள்முதலை விரிவுபடுத்துவதற்காக பொது நிதி விதிமுறைகளில் மத்திய அரசு தளர்வு அறிவித்துள்ளது.
நாட்டில் அதிகரித்துவரும் பிராணவாயுவின் தேவையை எதிர் கொள்வதற்காக பிராணவாயுவின் இருப்பை அதிகரிக்கவும், விநியோகத்தை சீரமைக்கவும், சேமிப்பு உள்கட்டமைப்பை வலுப்படுத்தவும் பல முக்கிய நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது.
பிராணவாயுவின் விநியோக சங்கிலியை கவனத்தில் கொண்டு இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. பிராணவாயுவின் இருப்பும் மேம்படுத்தப்பட்டுள்ளது.
டேங்கர்களின் பயன்பாடு அதிகரிக்கப்பட்டு, ஒரு இடத்திற்கு எடுத்துச் செல்லப்படும் டேங்கர்கள் அங்கு நீண்ட நேரம் காத்திருக்காமல் உடனே திரும்பி வரும் வகையில் ரயில் மற்றும் விமானங்கள் வாயிலாக அவை கொண்டு செல்லப்படுகின்றன.