பாதுகாப்பு கவச உடைகள், முக கவசங்கள் தயாரிப்பில் இந்தியா தன்னிறைவு பெற்றுள்ளது.
கடந்த ஆண்டு மார்ச் இறுதியில் இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவத் தொடங்கிய போது சுகாதார பணியாளர்களுக்கு தேவையான பாதுகாப்பு கவச உடைகள், என் 95 முகக்கவசங்களுக்கு பெரும் தட்டுப்பாடு இருந்ததால் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டன.
இந்த நிலையில் மத்திய அரசின் துரித நடவடிக்கைகளால் சில மாதங்களிலேயே பாதுகாப்பு கவச உடைகள், என் 95 முகக்கவச உற்பத்தியில் இந்தியா சாதனை படைத்தது.
கடந்த டிசம்பர் மாத புள்ளிவிவரத்தின்படி, சர்வதேச அளவில் பாதுகாப்பு கவச உடைகளை அதிகம் உற்பத்தி செய்யும் நாடுகளின் பட்டியலில் இந்தியா 2-வது இடத்தில் உள்ளது.
கடந்த மாதத்தில் மட்டும் ஒரு கோடி பாதுகாப்பு கவச உடைகள் தயாரிக்கப்பட்டுள்ளன. இந்தியாவில் தற்போது ஒரு மாதத்துக்கு 3 கோடி என் 95 முகக்கவசங்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன.