அசாம் மாநிலத்தின் புதிய முதலமைச்சராக ஹிமந்த பிஸ்வ சர்மா பதவியேற்றுக்கொண்டார்.
அவருடன் புதிய அமைச்சர்களும் பதவியேற்றனர். அசாம் சட்டமன்றத் தேர்தலில் பாஜக மீண்டும் வெற்றி பெற்று ஆட்சியைத் தக்க வைத்துக்கொண்டது.
நேற்று நடைபெற்ற பாஜக சட்டமன்ற உறுப்பினர்களின் கூட்டத்தில் தலைவராக ஹிமந்த பிஸ்வ சர்மா தேர்ந்தெடுக்கப்பட்டார். இன்று புதிய முதலமைச்சராக அவர் பதவியேற்றுக்கொண்டார்.
அவருடன் அமைச்சர்களும் பதவியேற்றுக்கொண்டனர். அவர்களுக்கு ஆளுநர் ஜெகதீஷ் முகி பதவியேற்பு உறுதிமொழி செய்துவைத்தார். இந்த நிகழ்ச்சியில் பாஜக தலைவர் ஜே.பி.நட்டா மற்றும் வடகிழக்கு மாநிலங்களின் முதலமைச்சர்கள் கலந்துகொண்டனர்.