கொரோனா பாதிப்பைக் கட்டுப்படுத்த இந்தியாவுக்கு உதவுவதற்காக இஸ்ரேலில் இருந்து ஆக்சிஜன் உற்பத்திக் கருவிகள், வென்டிலேட்டர்கள் உள்ளிட்ட உதவிப் பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
இஸ்ரேலில் இருந்து 1300 ஆக்சிஜன் உற்பத்திக் கருவிகள், 400 வென்டிலேட்டர்கள், மருந்துகள், மருத்துவக் கருவிகளை விமானத்தில் ஏற்றி அனுப்பி வைத்தனர்.
அந்த விமானம் உத்தரப்பிரதேசத்தின் காசியாபாத்தில் உள்ள ஹிண்டன் விமானப்படைத் தளத்துக்கு நேற்றிரவு வந்து சேர்ந்தது.