இந்தியாவில் தற்போதைய சூழலில் 260 கோடி கொரோனா தடுப்பூசி போடுவது இயலாத செயல் என பாரத் பயோடெக் நிறுவனத்தின் இணை மேலாண் இயக்குநர் தெரிவித்துள்ளார்.
ஐரோப்பிய ஒன்றியம் - இந்தியா வணிக மாநாட்டில் பாரத் பயோடெக் இணை மேலாண் இயக்குநர் சுசித்ரா எல்லா பேசினார்.
அப்போது, பெருமளவில் தடுப்பு மருந்து தேவை உள்ள நிலையில் உற்பத்தியை அதிகப்படுத்தத் தொழில் கூட்டு, தொழில்நுட்பப் பரிமாற்றம், மருந்துக்கான உட்பொருள் வழங்கல் ஆகியன தேவை எனக் குறிப்பிட்டார்.
இந்தியா போன்ற பெரிய நாடுகளில் தடுப்பு மருந்துத் தேவையை நிறைவு செய்யப் பிற நிறுவனங்களுடன் கூட்டாகச் செயல்படுவது இன்றியமையாதது எனக் குறிப்பிட்டார்.
பாரத் பயோடெக் நிறுவனம் கோவாக்சின் என்னும் கொரோனா தடுப்பூசியைத் தயாரித்து வருவது குறிப்பிடத்தக்கது.