நாடு முழுவதும் இது வரை பல்வேறு மாநிலங்களுக்கு 3ஆயிரத்து 400 மெட்ரிக் டன் திரவ ஆக்சிஜன் 220 டேங்கர்களில் விரைவு ரயில்கள் மூலம் விநியோகிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே துறை தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக ரயில்வே வெளியிட்ட அறிக்கையில், இதுவரை 54 ஆக்சிஜன் விரைவு ரயில்கள் இயக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது 26 டேங்கர்களில் 417 டன் திரவ மருத்துவ ஆக்சிஜன் டெல்லி, மகாராஷ்டிரம், உத்தர பிரதேசம், ஹரியாணா மாநிலங்களுக்கு ரயில்கள் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன என்றும் கூறப்பட்டுள்ளது.
கொரோனா 2வது அலையை சமாளிக்கும் வகையில் ஆக்சிஜன் பற்றாக்குறையை தீர்க்க கடந்த மாதம் பிற்பகுதியிலிருந்து ஆக்சிஜன் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.