திரவ மருத்துவ ஆக்சிஜனை கொண்டு செல்லும் டேங்கர்களுக்கு சுங்க கட்டணத்திலிருந்து தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் விலக்களித்துள்ளது.
திரவ மருத்துவ ஆக்சிஜனை எடுத்து செல்லும் டேங்கர்கள் மற்றும் கொள்கலன்கள் தேசிய நெடுஞ்சாலைகளில் தடையின்றி முன்னேறுவதை உறுதி செய்வதற்காக, சுங்கச்சாவடிகளில் செலுத்த வேண்டிய கட்டணத்திலிருந்து 2 மாத காலத்திற்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
இதனால் சுங்கச்சாவடிகளில் ஆக்சிஜன் டேங்கர் லாரிகள் காத்திருக்க வேண்டிய அவசியம் இருக்காது . ஆம்புலன்சுகள் போலவே ஆக்சிஜன் டேங்கர் லாரிகளும் இனி சுங்கச்சாவடிகளில் தடையின்றி பயணிக்க இந்த உத்தரவு வகை செய்கிறது.