கொரோனா காலகட்டத்தில், சிறைகளில் கைதிகள் நெருக்கமாக அடைக்கப்படுவதை தவிர்க்க, 7 ஆண்டுக்கும் குறைவான சிறைத்தண்டனை பெறக்கூடிய வழக்குகளில், குற்றஞ்சாட்டப்பட்டவர்களை கைது செய்யக்கூடாது என, போலீசாருக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கொரோனா தொற்றை தடுக்க கடந்த ஆண்டு பரோல் வழங்கப்பட்ட தண்டனை கைதிகளுக்கு இந்த ஆண்டும் 90 நாட்கள் பரோல் வழங்க வேண்டும் எனவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சிறைகளில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த சிறைச்சாலைகளை ஆய்வு செய்து தேவையான கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை எடுப்பதுடன், தொற்று பாதிப்பு வாய்ப்பு உள்ள கைதிகளை உடனடியாக விடுவிக்க வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.