உரிய அடையாள அட்டை இல்லாததைக் காரணம் காட்டி எந்தவொரு நோயாளியையும் சிகிச்சைக்குச் சேர்க்க மறுக்கக் கூடாது என மத்திய நலவாழ்வு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மேலும் கொரோனா சிகிச்சை மையங்களில் நோயாளியைச் சேர்க்க அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்க வேண்டும் என்பது கட்டாயமில்லை எனத் தெரிவித்துள்ளது.
கொரோனா தொற்றுள்ளவர் என சந்தேகிக்கப்படுபவரைச் சிகிச்சை மையத்தில் சேர்க்கலாம் எனக் குறிப்பிட்டுள்ளது. எங்கிருந்து வந்தாலும் எந்தவொரு நோயாளிக்கும் தேவையான மருந்துகள், ஆக்சிஜன் வசதி உள்ளிட்டவை மறுக்கப்படக் கூடாது என மத்திய குறிப்பிட்டுள்ளது.
மருத்துவமனை அமைந்துள்ள ஊரைச் சேர்ந்தவர் இல்லை என்பதால் சிகிச்சைக்குச் சேர்க்க மறுக்கக் கூடாது என்றும், தேவையின் அடிப்படையிலேயே சேர்க்கை இருக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளது.