புதுச்சேரியில், பாஜகவைச் சேர்ந்த மூவர், துணை முதலமைச்சர் மற்றும் அமைச்சர்களாக விரைவில் பதவியேற்க உள்ளதாக மத்திய இணை அமைச்சர் கிஷன் ரெட்டி தெரிவித்துள்ளார்.
முதலமைச்சர் ரங்கசாமியின் பதவி ஏற்பு விழாவில் பங்கேற்ற பின்னர், கட்சி எம்எல்ஏக்களுடன் துணைநிலை ஆளுநரை அவர் சந்தித்தார்.
பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய கிஷன் ரெட்டி, ஆட்சியில் என்.ஆர்.காங்கிரஸ் மற்றும் பாஜகவிற்கு தலா 3 அமைச்சர்கள் என பதவியை பிரித்து கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளதாகக் கூறினார்