கொரோனா பாதிப்பு நிலவரம், தடுப்பு மருந்து கிடைப்பது, சுகாதார உட்கட்டமைப்பு மேம்பாடு ஆகியவை குறித்துப் பிரதமர் மோடி ஆய்வு நடத்தியுள்ளார்.
ஒரு லட்சத்துக்கு மேற்பட்ட கொரோனா நோயாளிகளைக் கொண்ட 12 மாநிலங்களில் கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்துப் பிரதமருக்கு அதிகாரிகள் எடுத்துரைத்தனர்.
அதிகப் பாதிப்புக்குள்ளான மாவட்டங்களுக்கு தேவையான மருந்துகள் கிடைப்பதை உறுதி செய்ய மருந்து உற்பத்தியை அதிகரிக்கும்படி கேட்டுக்கொண்டார்.
இந்தக் கூட்டத்தில் மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், அமித் ஷா, நிர்மலா சீதாராமன், ஹர்சவர்த்தன், பியூஷ்கோயல் மற்றும் துறைச் செயலாளர்கள் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.