கேரளாவில் கொரோனா இரண்டாம் அலையின் தாக்கம் தீவிரமாக இருப்பதால் வரும் 8 ஆம் தேதி முதல் 16 ஆம் தேதி வரை 9 நாட்கள் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஒரு வாரமாக கேரளாவில் கொரோனா தொற்று கட்டுக்கு அடங்காமல் உள்ளது. எனவே 8ந் தேதி முதல் அமலாகும் ஊரடங்கு காலத்தில் அத்தியாவசிய பொருட்கள் விற்கும் கடைகள் மட்டும் குறிப்பிட்ட நேரங்களில் திறக்க அனுமதிக்கப்படும்.
மருத்துவமனைகள், கொரோனா கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் உள்ளிட்ட மிகவும் தேவையான சேவைகள் மட்டுமே இயங்கும். கேரளாவில் நேற்று ஒரே நாளில் 41 ஆயிரத்து 953 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.