கொரோனா தடுப்பூசியை பல நாடுகளும் உற்பத்தி செய்ய ஏதுவாக, அதன் காப்புரிமையில் தளர்வுகளை அறிவிக்க வேண்டும் என்ற இந்தியாவின் கோரிக்கையை ஆதரிப்பதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
குறிப்பிட்ட நிறுவனங்கள் அல்லது நாடுகளிடம் மட்டும் தடுப்பூசி காப்புரிமை இருந்தால், உலக அளவில் அதன் விநியோகத்தில் பாரபட்சம் காட்டப்படும்.
பணக்கார நாடுகளுக்கு மட்டுமே தடுப்பூசி கிடைக்கும் என்பதால், காப்புரிமை மீதான கட்டுப்பாட்டை தளர்த்த வேண்டும் என இந்தியாவும், தென்னாப்பிரிக்காவும் வலியுறுத்தி வருகின்றன. இதை பைடன் நிர்வாகம் ஆதரிப்பதாக அமெரிக்க வர்த்தக பிரதிநிதி கேத்தரின் தாய் தெரிவித்துள்ளார்.