சீரம் நிறுவனத் தலைவர் அடார் பூனாவாலாவுக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு வழங்க உத்தரவிடக் கோரி மும்பை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அதில் மிரட்டல் விடுப்போருக்கு எதிராக வழக்குப் பதிவுசெய்யப் புனே காவல் ஆணையருக்கும், மகாராஷ்டிர டிஜிபிக்கும் அறிவுறுத்த வேண்டும் என்றும் கோரியுள்ளது. கோவிஷீல்டு கொரோனா தடுப்பு மருந்து உற்பத்தி செய்யும் சீரம் நிறுவனத் தலைவர் அடார் பூனாவாலா தனக்கு, மாநில முதலமைச்சர்கள், பெருந்தொழிலதிபர்களிடம் இருந்து தொடர்ந்து தொலைபேசி அழைப்புகள் வருவதாகத் தெரிவித்திருந்தார்.
ஒவ்வொருவரும் தங்களுக்குத் தடுப்பு மருந்து ஒதுக்கீடு செய்து வழங்க வேண்டும் என அதிகாரத்துடன் கேட்பதாகவும் சிலர் மிரட்டல் விடுப்பதாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து இசட் பிளஸ் பாதுகாப்பு வழங்கக் கோரியுள்ளனர்.