பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனுடன் காணொலி வாயிலாக உரை நிகழ்த்திய பிரதமர் மோடி , வங்கி மோசடி வழக்கில் கைதான விஜய் மல்லயா, நீரவ் மோடி ஆகியோரை இந்தியாவுக்கு அனுப்பி வைக்கும்படி கேட்டுக் கொண்டுள்ளார்.
பொருளாதார குற்றவாளிகளை அவர்கள் சொந்த நாட்டிற்கு அனுப்பி வைத்து சட்டப்படி அவர்களுக்கு தண்டனை வழங்கப்பட வேண்டும் என்று பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளர். இந்தியாவின் கோரிக்கையை பரிசீலிப்பதாகவும் முழு ஒத்துழைப்பு வழங்கத் தயாராக இருப்பதாகவும் போரிஸ் ஜான்சன் உறுதியளித்துள்ளார்.
இங்கிலாந்தின் சில தனிச்சட்டங்களால் குற்றவாளிகளை நாடு கடத்துவதில் உள்ள சிக்கல்களை போரிஸ் ஜான்சன் மோடியிடம் எடுத்துரைத்தார். சட்டம் தடையாக இருப்பினும் தம்மால் முடிந்த மட்டும் உதவுவதாக அவர் உறுதியளித்துள்ளார்.