தேவையின்றி அடிக்கடி சி.டி. ஸ்கேன் எடுக்க வேண்டாம் என்றும், சி.டி. ஸ்கேன் அடிக்கடி எடுத்தால் புற்றுநோய் வரும் என்றும் எய்ம்ஸ் இயக்குனர் ரந்தீப் குலேரியா எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கொரோனா நோய்த்தொற்றின் லேசான அறிகுறிகளுக்காக சி.டி. ஸ்கேன் தவறாக பயன்படுத்தப்படுகிறது என்றார். சி.டி. ஸ்கேன் அதிகமாக பயன்படுத்துவதால் கதிர்வீச்சின் வெளிப்பாடு அதிகரிக்கும் என்றும் புற்றுநோய் ஏற்படும் அபாயம் உள்ளது என்றும் அவர் கூறினார்.
ஒரு சி.டி. ஸ்கேன் 300 மார்பு எக்ஸ்ரேக்களுக்கு சமம் என்பதால் தேவையின்றி அடிக்கடி சி.டி. ஸ்கேன் எடுக்க வேண்டாம் என்று அவர் குறிப்பிட்டார். லேசான தொற்று பாதிப்புக்காக ஸ்கேன் செய்வதில் எந்த பலனும் இல்லை என்றும் அவர் தெரிவித்தார்.