புதுச்சேரி சட்டமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றிபெற்றுள்ள நிலையில், என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ரங்கசாமியை பா.ஜ.க. நிர்வாகிகள் சந்தித்து ஆலோசனை நடத்தினர்.
மொத்தமுள்ள 30 சட்டமன்ற தொகுதிகளில் என்.ஆர்.காங்கிரஸ் 10 இடங்களிலும், பாஜக 6 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளது.
இந்நிலையில், திலாஸ்பேட்டை பகுதியில் அமைந்துள்ள என் ஆர் காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி வீட்டுக்குச் சென்ற பாஜக தேர்தல் பொறுப்பாளர் நிர்மல்குமார் சுரானா, எம்பி ராஜூ சந்திரசேகர் ஆகியோர் ரங்கசாமிக்கு வாழ்த்து வாழ்த்துக் கூறியதோடு, ஆலோசனையும் நடத்தினர்.
தொடர்ந்து பேசிய என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி, வெற்றி பெறச் செய்த மக்களுக்கு நன்றி தெரிவித்துக் கொண்டார்.