மேற்கு வங்கத்தில் முதலமைச்சர் மம்தா பானர்ஜி போட்டியிட்டு தோல்வி அடைந்த நந்திகிராம் தொகுதியில் வாக்குகளை மீண்டும் எண்ண வேண்டும் எனத் திரிணாமூல் காங்கிரஸ் விடுத்த கோரிக்கையை ஏற்கத் தேர்தல் ஆணையம் மறுத்துவிட்டது.
நந்திகிராம் தொகுதியில் பாஜக வேட்பாளர் சுவேந்து அதிகாரியும், திரிணாமூல் வேட்பாளர் மம்தா பானர்ஜியும் மிகக் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் மாறி மாறி முன்னிலையில் இருந்தனர்.
இறுதியில் பாஜக வேட்பாளர் சுவேந்து அதிகாரி ஆயிரத்து 736 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றதாக அறிவிக்கப்பட்டது. வாக்குகளை மீண்டும் எண்ண வேண்டும் எனத் திரிணாமூல் காங்கிரஸ் விடுத்த கோரிக்கையைத் தேர்தல் ஆணையம் நிராகரித்துள்ளது.
ஒப்புகைச் சீட்டு எந்திரத்துடன் ஒப்பிட்டுப் பார்த்தபின் முறைப்படி முடிவு அறிவிக்கப்படும் எனத் தேர்தல் நடத்தும் அலுவலர் தெரிவித்தார்.