ஆளில்லா விமானங்கள் மூலம் கொரோனா தடுப்பூசிகளை எடுத்துச் செல்ல தெலங்கானா அரசுக்கு விமானப் போக்குவரத்து அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது.
எனினும், சுமார் அரை கிலோ மீட்டர் தொலைவு வரைக்குமே இந்த ஆளில்லா விமானங்களைப் பயன்படுத்த வேண்டும் என்ற நிபந்தனையில் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
மேலும் கொரோனா தடுப்பூசிகளுக்கு மட்டும்தான் இதனைப் பயன்படுத்த வேண்டும் என்றில்லாமல், பொதுவான அனைத்து தடுப்பூசிகளையும் எடுத்துச் செல்லவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இதன்படி, அடுத்த ஓராண்டுக்கு தடுப்பூசிகளை எடுத்துச் செல்ல ஆளில்லாத விமானங்களை தெலங்கானா அரசு பயன்படுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.