கிழக்கு சீன துறைமுகம் ஒன்றில் நங்கூரமிட்டுள்ள சரக்கு கப்பலில் இருக்கும் சீன மாலுமிகள் 10 பேருக்கு இந்திய வகை கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதாக சீன சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஹுவாயாங் சாவோயாங் என்ற இந்த கப்பல் இந்த ஆண்டு துவக்கத்தில் ஆந்திர மாநிலம் காக்கிநாடா துறைமுகத்திலும் அதன்பின்னர் வங்கதேசத்தின் சிட்டகாங், சிங்கப்பூர் துறைமுகங்களிலும் சரக்கு ஏற்றி இறக்கியதாக சீன அரசு ஊடகம் தெரிவித்துள்ளது.
தற்போது சுவோஷான் ஷின்யா துறைமுகத்தில் நிறுத்தப்பட்டுள்ள இந்த கப்பலில் உள்ள 20 மாலுமிகளில் 10 பேருக்கு இந்தியாவில் பரவும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.