விமானப்படைத் தளபதி பதவுரியாவுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார். கொரோனா தொடர்பான நிவாரணப் பணிகளை மேற்கொள்ள விமானப்படை எந்நேரமும் தயார்நிலையில் இருப்பதாக பதவுரியா உறுதியளித்தார்.
24 மணி நேரமும் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் வகையில், அனைத்து வரிசை விமானங்களின் ஊழியர் எண்ணிக்கையும் அதிகரிக்கப்பட்டுள்ளதாக பிரதமரிடம் பதவுரியா கூறினார்.
விமானப்படை மருத்துவமனைகளிலும் கொரோனா சிகிச்சை வசதி அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும், அங்கு பொதுமக்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.
ஆக்சிஜன் டேங்கர்கள் மற்றும் பிற அத்தியாவசிப் பொருட்களை எடுத்துச் செல்வதை குறித்தும் ,விமானப்படையினரின் பாதுகாப்பை குறித்தும் அப்போது பிரதமர் மோடி வலியுறுத்தினார்.