பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனமான டிஆர்டிஒ மூலம் 3 மாதங்களுக்குள் 500 மருத்துவ ஆக்சிஜன் உற்பத்தி மையங்கள் உருவாக்கப்படும் என்று பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் தெரிவித்துள்ளார்.
பிஎம் கேர்ஸ் நிதியில் இருந்து அவை அமைக்கப்படும் என்றும் உடனடியாக ஆக்சிஜன் பயன்படுத்தக் கூடிய விதத்தில் இவை உருவாக்கப்படும் என்று ராஜ்நாத்சிங் தெரிவித்துள்ளார்.
கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க மருத்துவ ஆக்சிஜனின் தேவை அதிகரித்து வரும் நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது.