நடுவானில் பறக்கும்போதே விமானங்களுக்கு எரிபொருள் நிரப்பும் வசதியுள்ள ஏர்பஸ் விமானத்தை பிரான்சிடம் இருந்து குத்தகைக்கு எடுக்க இந்திய விமானப்படை திட்டமிட்டுள்ளது.
பிரான்சில் இருந்து ரபேல் போர் விமானங்களை இந்தியாவுக்குக் கொண்டுவருவதற்கு நடுவானில் எரிபொருள் நிரப்பும் வசதி கொண்ட ஏர்பஸ் ஏ 330 வகை விமானங்கள் பயன்படுத்தப்படுகின்றன.
பிரான்சிடமும், ஐக்கிய அரபு அமீரக விமானப்படையிடமும் இந்த விமானத்தைப் பெற்று இந்தியா பயன்படுத்தி வருகிறது. இந்நிலையில் மேலும் 5 ஏர்பஸ் விமானங்களை பிரான்சிடம் இருந்து குத்தகைக்குப் பெற இந்திய அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.
இந்திய விமானப்படைத் தளபதி பதாரியா கடந்தவாரம் பிரான்சுக்குச் சென்றபோது இதுதொடர்பாகப் பேசியதாகக் கூறப்படுகிறது.