மத்தியப்பிரதேச மாநிலம் ரட்லம் நகரில் கொரொனா தொற்று பாதித்த மணமகனை பிபிஇ உடை அணிந்து மணமகள் திருமணம் செய்து உள்ளார்.
ரட்லம் நகரை சேர்ந்த ஒரு ஜோடிக்கு நேற்று திருமணம் நிச்சயிக்கப்பட்டு இருந்த நிலையில் மணமகனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து முகூர்த்தத்தை கைவிட மனமில்லாத திருமண வீட்டார் கொரோனா தொற்றில் இருந்து பாதுகாப்பாக இருக்க பயன்படுத்தப்படும் பிபிஇ உடை அணிந்து திருமணம் செய்து உள்ளனர்.
பிபிஇ பாதுகாப்பு உடை அணிந்த தம்பதி அக்னியை வலம் வந்து திருமணம் செய்து கொண்டனர்.